Thursday, January 08, 2015

On Thursday, January 08, 2015 by farook press in ,    
புதுடெல்லியின் துவாராகா பகுதியை சேர்ந்தவர் அமித் பச்சன் (வயது 32) அவரது மனைவி ஷிவானி பத்னி இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. நேற்று இரவு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி  பேசினர். இதில் கோபம்  அடைந்த அமித் பச்சன் கத்தியை எடுத்து மனைவியை குத்தினார். பின்னர் டிராயிங் அறைக்குள் சென்ற பூட்டி கொண்டார்.

உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.  போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.


பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-

தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர்  அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில்  விட்டு  நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார்.  இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

0 comments: