Wednesday, January 14, 2015

On Wednesday, January 14, 2015 by Unknown in ,    
பொங்கல் மற்றும் இதர இனிப்பு, பலகாரங்ளை கால்நடைகளுக்கு வழங்குவதால் அவற்றுக்கு அமிலநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருப்பூர் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கால்நடைகள் வழக்கமாக உண்ணும் வைக்கோல், தீவனங்களை தவிர்த்து மாவுப் பொருள்களையும், சர்க்கரை சத்து மிகுந்த பொருள்களையும் உண்பதால் அவற்றுக்கு அமிலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்குப் பின், கால்நடைகளை இந்நோய் அதிகளவில் தாக்குவதாக மருத்துவக் கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது.
இந்நோய்த் தாக்குதலுக்குள்ளான கால்நடைகளின் வயிறு வீóக்கம், வயிற்றில் அதிகளவு நீர்த்தேக்கம், நாக்கு வறண்டு தாகம் எடுத்தல், வயிறு அசைவின்மை, தீவனம் உண்ணாமை, சிறுநீர் வெளியேறுவது குறைதல், அதிதீவிர நிலையில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கண்தெரியாமை, தலையால் மோதிக் கொள்ளுதல், ஒருவித அமைதி நிலை போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
எனவே, கால்நடைகள் பொங்கல், பாயசம் மற்றும் பலகாரங்களை கால்நடைகள் உண்பதற்கு கொடுக்கக்கூடாது. ஒருவேளை பலகாரம், இனிப்புகளை கால்நடைகளுக்கு கொடுத்த பின் அவற்றின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments: