Wednesday, January 14, 2015

On Wednesday, January 14, 2015 by Unknown in ,    
தாராபுரம், ஜன. 13: தாராபுரம் அருகே உள்ள தர்கா உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 தாராபுரம்- கரூர் சாலையில் காளிபாளையம் கிராமத்தில் உள்ளது குண்டுலெப்பை சாயபு தர்கா. இந்தத் தர்காவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வழிபடுவதும், காணிக்கை செலுத்துவதும் வழக்கம். இந்நிலையில், இந்தத் தர்கா நிர்வாகத்தினர், திங்கள்கிழமை மாலை தர்காவை வழக்கம் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். பிறகு, செவ்வாய்க்கிழமை காலை, தர்காவை திறந்துள்ளனர். அப்போது, தர்காவின் மேற்கூரை பிரிக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தர்கா நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதமாக திறக்கப்படாத இந்த உண்டியலில் ரூ.1லட்சம் இருக்கும் என தர்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

0 comments: