Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by farook press in ,    
விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டதையடுத்து ஜோர்டான் அரசு ஜிகாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.
 ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார். அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பான விடியோவையும் வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோர்டான் அரசு தங்களது பிடியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு தீவிரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றியது.
ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி ஆகியோரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது. முன்னதாக முயாத்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments: