Friday, February 13, 2015

On Friday, February 13, 2015 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: மேயர் உத்தரவுமதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் கதிரவன், துணை கமிஷனர் மீனாட்சி, நகர பொறியாளர் மதுரம் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்படும் சாலை வசதி, குடிநீர் உள்ளி அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் மேயர் ராஜன்செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பகுதிகளில் கோடையை சமாளிக்கும் விதமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், லாரி மூலம் விநியோகம் செய்யும் பகுதிகளில் உடனுக்குடன் தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் ராஜன்செலலப்பா உத்தரவிட்டார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அவனியாபுரம், பெருங்குடி மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சீர்படுத்தி, தயார் நிலையில் இருக்க செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

0 comments: