Monday, March 23, 2015

On Monday, March 23, 2015 by Unknown in ,    




திருப்பூரில் குழந்தையை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட்டைச் சேர்ந்தவர் அழகர்சாமி (34). இவரது மனைவி பாண்டீஸ்வரி(25). இவர்களின் மகள் நிவேதாஸ்ரீ (4). இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதலே பாண்டீஸ்வரின் நடத்தையில் அழகர்சாமி சந்தேகித்து வந்துள்ளார். இதனால் அவரை நீண்ட நாள்களாக கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில், கணவனின் கொடுமையை தாங்க முடியாத பாண்டீஸ்வரி, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தனது மகள் நிவேதாஸ்ரீயை வீட்டில் உள்ள கூரையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததுடன், பின்னர் பாண்டீஸ்வரியும் அதே கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் 20.6.2010-ம் தேதி நடந்தது. இதுகுறித்து பாண்டீஸ்வரின் தந்தை செல்வராஜ் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அழகர்சாமியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி வசந்தலீலா விசாரித்து தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட அழகர்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்

0 comments: