Monday, March 23, 2015

On Monday, March 23, 2015 by Unknown in ,    




திருப்பூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒப்புதல் ரசீது பெற்றவர்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 வேலம்பாளையம், நல்லூர் மண்டல அலுவலகங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
15 வேலம்பாளையத்துக்கு உள்பட்ட 8, 9,10,12,13 ஆகிய வார்டுகள், நல்லூர் மண்டலத்திற்குள்பட்ட 31, 32, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளில் இதுவரை ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்காதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
புகைப்படம் எடுக்க வரும்போது 2011ம் ஆண்டில் வழங்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புதல் ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இதேபோல், மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்காக புதிதாக பூர்த்தி செய்து தரப்படும் படிவங்களுக்கு புகைப்படம் எடுப்பது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: