Monday, March 23, 2015

On Monday, March 23, 2015 by Unknown in ,    



ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 90-ஆவது பிறந்தநாளையொட்டி, மாரத்தான் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு போட்டியை தொடங்கி வைத்தார். திருப்பூர், காங்கயம் சாலை, நல்லூர் சி.எஸ்.ஐ.தேவாலயம் முன் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், முத்தணம்பாளையம், கணபதிபாளையம், சந்திராபுரம், செவந்தாம்பாளையம், சேரன் நகர், ராக்கியாபாளையம் பிரிவு வழியாக மீண்டும் நல்லூரில் நிறைவடைந்தது.
இதில், திருப்பூர் சென்சூரி பவுண்டேஷன் பள்ளி மாணவர் காளிமுத்து முதலிடமும், பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜ் இரண்டாமிடமும், திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கும், முதல் பத்து இடங்களை பிடித்த நபர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, கோபி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்

0 comments: