Wednesday, March 11, 2015

On Wednesday, March 11, 2015 by farook press in ,    
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (புதிய கட்டிடம்) கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெறுகின்றன. 
கட்டுரை போட்டிக்கு கல்வி - அறிவைத் தூண்டுவதா? மதிப்பெண்ணைத் தாண்டுவதா? அல்லது கல்வெட்டு முதல் கணினி வரை.. தமிழே காண்! அல்லது எந்நாட்டிலும் இல்லாத சாதி, இங்கு மட்டும் ஏன்? என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதலாம்.
கவிதை போட்டியில் சாதி மதங்களைப் பாரோம்! அல்லது மெல்லத் தமிழ் இனி வளரும்! அல்லது தீண்டாமைக்குத் தீயிடுவோம்! என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இரண்டு பக்க அளவில் கவிதைகள் எழுதலாம்.
இந்த போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தேவையான தாள்கள் இங்கேயே தரப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் மற்றும் பதக்கம், புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மார்ச் 22ம் தேதி திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டு கலை இரவு நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
இந்த போட்டிகள் குறித்து மேலும் விபரங்களுக்கு: 94434 70780, 97860 73353, 90039 46766, 99445 54204, 99428 87500, 94861 08729, 90434 64007, 94421 64354 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தெரிவித்துள்ளது.

0 comments: