Tuesday, March 17, 2015

On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
காங்கயம் பகுதியில் தகுந்த விலை கிடைக்காததால், வயலில் விளைந்த தக்காளிப் பழங்கள் தற்போது கால்நடைகளுக்கு தீவனமாகி வருகின்றன.
இதுகுறித்து தக்காளி பயிர் செய்த வீரணம்பாளையம் விவசாயி தங்கராசு கூறியது: தக்காளி சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. மாதக்கணக்கில் பயிர் செய்த தக்காளியை பறிப்பதற்கு ஆள்கள் கிடைப்பதில்லை. ஆள்கள் கிடைத்தாலும், கூலி அதிகமாக கேட்கிறார்கள். உற்பத்தி செய்த பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல ஆட்டோ வாடகை செலவு அதிகரித்து வருகிறது.
வெளிமார்க்கெட் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தக்காளிக்கு உற்பத்தி செலவைக் காட்டிலும், குறைவாக விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தக்காளியை மாடுகளுக்கும் உணவாக அளித்து வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த அவல நிலையைப் போக்குவதற்கு அரசு போதிய அளவு குளிர்சாதன காய்கறி கிடங்கு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்

0 comments: