Tuesday, March 17, 2015

On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 ஆண்டுகளாக குடிசைப் போட்டு வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்களாவர். இந்தக் குடும்பத்தினர் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. பட்டா இல்லாத காரணத்தால், அப் பகுதி வீடுகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இதனால் அப் பகுதி மக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே பல்லடம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சாலையில் பொதுமக்கள் மேற்கொண்ட மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தெற்கு காவல் ஆய்வாளர் நெல்சன் தமைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர்.
போலீஸார் வருவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மறியலை கைவிட்டு ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜை சந்தித்து தங்களது வீடுகளுக்கு இலவசமாக பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மனுவை அளித்தனர்

0 comments: