Thursday, March 19, 2015

On Thursday, March 19, 2015 by Unknown in ,    

மேலூர் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தக்கோரிமாண்புமிகுமக்களின் முதல்வர்அம்மா அவர்களிடம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.சாமி, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று இந்த திட்டத்தை ரூ.783 கோடி செலவில் செயல்படுத்த அம்மா அவரகள் ஆணை பிறப்பித்தார்.

அதன்படி, இந்த திட்டப் பணிகள் பல்வேறுகட்டங்களாக நடைபெற்று வந்தன. தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்ய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூமதுரைபுறநகர் மாவட்டகழகசெயலாளர்திரு ம.முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ ஆகியோர் இன்று மேலூர் வந்தனர். அங்குள்ள காந்திஜி பூங்காவில் இந்த திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான தரை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் இயக்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த திட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அறிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் மேலூர் ஆர்.சாமி, தமிழரசன், கூடுதல் கலெக்டர் ரோகிணி ராம்தாஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜபார், மேலூர் நகரசபை தலைவர் சரவணன், சேர்மன்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன், உமாபதி, நகரசபை துணைத்தலைவர் மெகராஜ்பீபி, கொட்டாம்பட்டி யூனியன் துணைத் தலைவர் குலோத்துங்கன், தொகுதி செயலாளர் செல்வம், பஞ்சாயத்து தலைவர்கள் சுரேஷ், துரை அண்ணா, சசிகலா மோகன், சொக்கனாண்டி, முன்னாள் நகரசபை தலைவர் சாகுல் அமீது.

கவுன்சிலர்கள் அன்புக்கரசு, சந்திரன், ராஜி நாகசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மேலூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக மதுரை கிழக்கு தொகுதி மாங்குளத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியையும் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0 comments: