Monday, March 02, 2015

On Monday, March 02, 2015 by Unknown in ,    
துபாயில் லிஃப்டுக்குள் ஜோர்டான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
 
கடந்த டிசம்பர் 17ஆம் தேதி புர்ஜ் துபாய் பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாக லிஃப்ட்டினுள் ஏறியுள்ளார். அப்போது உள்ளே இருந்த அந்த  பெண், நலம் விசாரிப்பதுபோல் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார்.
 
பிறகு திடீரென்று அந்த வாலிபரை நெருங்கி வந்து கட்டிப்பிடித்துள்ளார். லிஃப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், வாலிபரின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து லிஃப்டுக்குள்ளேயே போட்டுள்ளார். பிறகு, ஏழாவது மாடிக்கு செல்லும்படி லிப்ட்டின் பொத்தானை அழுத்தியுள்ளார்.
 
அபோது அந்த வாலிபரை பலவந்தமாக கட்டியணைத்து வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் லிஃப்ட் 7ஆவது மாடியை அடைந்துள்ளது. அந்த பெண் மீண்டும் நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தியுள்ளார். 4ஆவது மாடியில் லிஃப்ட் நின்றிருக்கிறது.
 
அப்போதுதான் அந்த வாலிபர் அவளிடம் இருந்து விடுபட்டு தப்பி வந்துள்ளார். ஆனால், வெளியே வந்து பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் வைத்திருந்த 4500 திர்ஹமை (இந்திய மதிப்புக்கு சுமார் 72 ஆயிரம் ரூபாய்) அபேஸ் செய்துள்ளார்.
 
ஜோர்டான் நாட்டுப் பெண் விசாரணையின்போது இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ”நான் கடவுளுக்கு பயந்து நடப்பவள். எந்த தவறையும் நான் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.
 
வாலிபரை அந்த பெண் லிப்ட்டினுள் இழுத்துப் போடுவதும், வெளியே தப்பித்து ஓடிவர முயற்சித்ததும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

0 comments: