Monday, March 02, 2015

On Monday, March 02, 2015 by Unknown in ,    
திருமண உறவையும் தாண்டி ஆணும், பெண்ணும் மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
தென்கொரியா அரசியல் சாசன சட்டத்தின்படி, ஒரு ஆண் அல்லது பெண் தன் மனைவியைத் தவிர, அல்லது கணவரைத் தவிர இன்னொருவருடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குற்றமாகக் கருதப்பட்டு வந்தது. இதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு வந்தது.
 

 
ஆனாலும், முறைகேடான பாலுறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 500ஆக அதிகரித்தது. மாறாக, இந்த வழக்குகளில் தண்டிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.
 
இந்நிலையில், அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதாவது கணவர், மனைவி தவிர்த்து இரண்டாவது நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்னும் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கை 9 பேர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரணை செய்தது. முடிவில், முறைகேடான பாலுறவு கிரிமினல் குற்றம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் இணைந்து வழங்கினார்கள். 2 நீதிபதிகள் மட்டும் இதை எதிர்த்தனர். எனவே மெஜாரிட்டி தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது.

0 comments: