Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by Unknown in ,    
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரான கே.தங்கவேலை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் அக்கட்சியின் மாவட்டச் செயலர் கே.காமராஜ் செவ்வாய்க்கிழமை அளித்த கடிதத்தில் கூறியிருப்பது:
அரசு விழாக்கள், அரசுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் அழைக்கப்படாமல், அவர் புறக்கணிக்கப்படுகிறார். அப்படி, அழைத்தாலும் தாமதமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை, உரிமைகளை மறுப்பதாகவே இது கருதப்படுகிறது. இத்தகைய செயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமரியாதை செய்வதாகும்.
எனவே, வரும் காலங்களில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும், உரிய முக்கியத்துவத்தோடு சட்டப்பேரவை உறுப்பினருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும். நிகழ்ச்சிகள் தொடர்பாக அவரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல்நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும்.
இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: