Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by Unknown in ,    
தாராபுரம் அருகே மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக ஓவிய ஆசிரியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்தது.
அதைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் அருள்ராஜ், கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பெற்றோர்கள் சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த பள்ளியின் ஓவிய ஆசிரியர் காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், இதைக் கண்காணிக்க தவறியதாக தலைமையாசிரியர் அருள்ராஜ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

0 comments: