Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by Unknown in ,    
தமிழக பட்ஜெட்டுக்கு திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறியது:
தமிழக நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பினரும் வரவேற்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 365 கோடி ஒதுக்கீடு, கைத்தறி, நெசவுத் தொழிலுக்கு ரூ. 449 கோடி ஒதுக்கீடு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், தமிழகத்திலுள்ள அûனைத்து மாநகராட்சிகளையும் சிறப்பு நகர்ப்புற திட்டத்தில் சேர்க்க நிதி, தொழில் துறை புதிய திட்டங்களுக்காக ரூ.17,314 கோடி, நதிநீர் இணைப்புக்கு நிதி ஒதுக்கீடு, சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்துக்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கத்தக்கதாகும் என்றார்.
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் கூறியது:
தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ப்பதற்கான திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது உயர்தர வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான மிக வேகமான முடிவாகும்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக ரூ. 365.91 கோடி ஒதுக்கீடு, இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் தொழில் துறை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக அமையும்.
எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு மின் உற்பத்தித் திட்டங்களுக்காக ரூ. 13,586 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், சாலை விரிவாக்கம், மேம்பாட்டுக்காக ரூ. 8,228 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். திருப்பூரின் நீண்டநாளைய கோரிக்கையான திருப்பூர் - தூத்துக்குடி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
ஏற்றுமதி, உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியது: மத்திய அரசு நிதிநிலை அறிக்கையைப் போன்றே தமிழக நிதிநிலை அறிக்கையிலும் திருப்பூர் பின்னலாடை தொழில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. நீண்ட கால கோரிக்கையான, திருப்பூருக்கென தனியாக மின் நிலையம், தொழிலாளர் தங்கும் விடுதிகள், இஎஸ்ஐ மருத்துவமனை, சாலை, சுகாதார மேம்பாடு போன்றவற்றுக்கு
நிதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தமளிக்கிறது. வேலைவாய்ப்பு பெருகிவரும் நிலையில் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு தனி முக்கியத்துவம் அளித்து மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) திருப்பூர் மாவட்டத் தலைவர் எம்.வேலுச்சாமி கூறியது: தொழில் துறை வளர்ச்சிக்கு உகந்ததாக தமிழக பட்ஜெட் விளங்குகிறது. புதிய தொழில்முனைவோர்களுக்கு ஒற்றைச்சாரள அடிப்படையில் தேவையான உரிமங்கள் அளிப்பது, தொழிலாளர் திறன் மேம்பாட்டுக்கு ரூ.150 கோடி ஒதுக்கியிருப்பது, சூரிய மின் சக்தித் திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்துவதாக அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியதாகும்.
எனினும், திருப்பூர் தொழில் நகரின் பல்வேறு தேவைகள் பட்ஜெட்டில் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது என்றார்

0 comments: