Monday, March 30, 2015
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் அரிசிக்கடை வீதியில் 2067 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்
தமிழக மக்கள் அனைவரும் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என அனைத்து கோவில்களிலும் பிரார்த்தனைகள் நடத்தும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வழங்கி24 மணி நேரத்தில் 20 மணி நேரம் பாடுபட்டு கொண்டிருக்கிற ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 2 ஆயிரத்து 67 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்திய திருநாட்டிலேயே மக்கள் திரண்டு பிறந்தநாள் கொண்டாடும் அளவுக்கு எந்த தலைவரும் இருந்ததில்லை.மக்கள் மீது ஜெயலலிதா வைத்துள்ள அன்பின் காரணமாக அவரது பிறந்த நாள் ஒரு மாதத்துக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் மேம்பட வேண்டும் என்றும், தமிழ் நாட்டு மக்களின் வாழ்கை மேம்படவும் கடந்த 4 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை கொடுத்து கொண்டிருக்கிற மக்களின் முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நல உதவிகள் வழங்கி எளிமையாக கொண்டாட ஆணையிட்டு இருக்கிறார்.அண்ணா தி.மு.க.தொண்டர்களின் பிரார்த்னைகள் வீண் போகாது. அவை நிறைவேறி விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நாள் விரைவில் வர இருக்கிறது. அந்நாள் தமிழக மக்களுக்கு பொற்காலம் துவங்கும் நாள் எனவே, அவருக்கு உங்கள் ஆதரவு என்றும் இருக்கு வேண்டும்.
தமிழகம் மேம்பட வேண்டும் என்றும், தமிழ் நாட்டு மக்களின் வாழ்கை மேம்படவும் கடந்த 4 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை கொடுத்து கொண்டிருக்கிற மக்களின் முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நல உதவிகள் வழங்கி எளிமையாக கொண்டாட ஆணையிட்டு இருக்கிறார்.அண்ணா தி.மு.க.தொண்டர்களின் பிரார்த்னைகள் வீண் போகாது. அவை நிறைவேறி விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நாள் விரைவில் வர இருக்கிறது. அந்நாள் தமிழக மக்களுக்கு பொற்காலம் துவங்கும் நாள் எனவே, அவருக்கு உங்கள் ஆதரவு என்றும் இருக்கு வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி பேசியதா வது:-
பொதுச் செயலாளர் ஜெயலலிதா 67வது பிறந்தநாளில் மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கான மார்பக புற்று நோய் கண்டுபிடிப்பு முகாம் நடை பெற்றது. அந்த முகாமில் 16 ஆயிரம் பேருக்கு மார்பக புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டு, 914 பேர் முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டு இருகின்றனர். இது ஒரு கின்னஸ் சாதனைதான், கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் விரைவில் முதலமைச்சர் அரியணையில் அமருவார் கோடன கோடி இதய மக்கள் அவருக்கு பக்க பலமாக இருந்து வாழ்த்துவார்கள். இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ.,தனது வாழ்த்துரையில்,
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் 32 மாவட்டங்களிலும் இதுவரை 5 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பஸ் டிரைவர்கள் மீது சாற்றப்படும் குற்றமாக விபத்து கால பிரச்சினைகள் தீர்க்க தொழிற்சங்கம் மூலம்ஜெயலலிதா சரி செய்து உள்ளார். தொழிலாளர்களுக்காக அண்ணா தொழிற்சங்கத்திற்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளார். தொழிலாளர்களின் நம்பிக்கை வீண் போகாது.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 1000 லிருந்து 1500 ரூபாய் வரையிலான சம்பள உயர்வை மக்கள்முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசு வழங்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பல்லடம் பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும் வடக்கு தொகுதி செயலாளர் ஜான், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கரைப்புதூர் நடராஜன், யு.எஸ்.பழனிசாமி, ஹரிஹரசுதன், டி.பார்த்திபன், அட்லஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார், எஸ்பி.என். பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, நீதிராஜன், மாமன்ற உறுப்பினர்கள் அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் சி,.டி.சி.கிருஷணன் , ராஜசேகரன், பொன்னுசாமி, கிளைச் செயலாளர்கள் சி.டி.சி.ராஜேந்தி ரன், சரவணன், பழனியப்பன், ரவிக்குமார், உள்ளிட்டவர்களும், ஹோட்டல் சங்க நிர்வகிகள் வினோத்குமார், முபாரக், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...

0 comments:
Post a Comment