Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
மலேசியத் தலைநகரில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார்கள் எனும் சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறையின் தலைவர் கூறுகிறார்.

மலேசியாவில் தீவிரவாத சந்தேகத்தில் 17 நபர்கள் கைது

 
கோலாலம்பூரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களில் இருவர் அண்மையில்தான் சிரியாவில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து திரும்பியிருந்தனர் என காலித் அபு பகர் தெரிவித்துள்ளார்.
 
காவல் நிலையங்கள், இராணுவப் பாசறைகள் ஆகியவை அவர்களது திட்டமிட்ட இலக்குகளாக இருந்தன என்று மலேசியாவின் உள்துறை அமைச்சர் அஹ்மத் ஜாகித் ஹமீது கூறுகிறார்.
 
மலேசியாவில் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய சட்ட வழிமுறைகள் தொடர்பிலான பிரேரணைகளை கடந்த வாரம் அரசு முன்வைத்திருந்தது.
 
அதன் அடிப்படையில் தீவிரவாத சந்தேக நபர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் காலவரையற்ற காவலில் வைக்க வழியுள்ளது.
 
அரசு கொண்டுவந்துள்ள அந்தப் பிரேரணை ஒடுக்குமுறை நோக்கம் கொண்டது என மனித உரிமை அமைப்புகளும், எதிர்கட்சிகளுக்கும் கூறி அதை விமர்சித்துள்ளன.

0 comments: