Tuesday, April 14, 2015

On Tuesday, April 14, 2015 by Unknown in ,    
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 நூல்கள் வெளியீட்டு விழாவில், அவர் ஆற்றிய சிறப்புரை:
திருவள்ளுவர், பாரதியார் போன்ற பல காலத்தை வென்ற பெருமைமிகு கவிஞர்களை இந்த உலகுக்கு தமிழ் மொழிதான் அளித்துள்ளது. பத்திரிகைகளில் வரும் தலையங்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவை தமிழின் பல தளங்களை எடுத்துரைக்கும் சாதனங்களாகவே கருதவேண்டும்.
இதில், தலையங்கம் எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. அதற்கென்று ஒரு தனித்த சிந்தனைப் பார்வை வேண்டும். தலையங்கத்தில் விவாதப்பூர்வமான பல விஷயங்களை குறிப்பிட்டு, இறுதியில் தமக்கான ஒரு நிலைப்பாட்டை குறிப்பிடவேண்டும். நமது நிலைப்பாட்டை வாசகர்கள் ஒப்புக்கொள்ளுமாறு எழுதுவதே, தலையங்கத்தின் தனிச்சிறப்பு.
பத்திரிகை தலையங்கம் மிக எச்சரிக்கையாகவும், பக்குவத்துடனும் எழுதப்பட வேண்டும். பத்திரகையின் முகத்தைக் காட்டக்கூடிய கண்ணாடியாக இருப்பது தலையங்கம்தான். எனவே, எதிர்காலத்திலாவது நாளிதழ்களில் இலக்கியத்தை மையப்படுத்தி தலையங்கங்கள் எழுதப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், சுவாமி சதாசிவானந்தா, உலகத் திருக்குறள் பேரவை பொதுச் செயலர் ந. மணிமொழியனார், புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் பி. வரதராஜன், பேராசிரியர் மு. அருணகிரி, எழுத்தாளர் புதுகை மு. தருமராஜன், சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

0 comments: