Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
மடத்துக்குளத்தில் புதிதாக சார் நிலை கருவூல கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
  இதற்கான பணிகளை பூமிபூஜை செய்து, மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு தொடங்கி வைத்தார். உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், மடத்துக்குளம் வட்டாட்சியர் சண்முகவடிவேலு, கூட்டுறவு சங்கத் தலைவர் எம்எஸ்.காளீஸ்வரன், வருவாய்த் துறை அதிகாரிகள், அலுலர்கள் கலந்து கொண்டனர்.
 இங்கு, ரூ. 52 லட்சம் செலவில் கருவூல அறை, பாதுகாப்பு அறை, கருவூல அலுவலர் அறை, பண்டக அறை ஆகியவை கட்டப்படவுள்ளன.

0 comments: