Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
திருப்பூர், :  திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு நடத்தும் 2015-16ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 24ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 16 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.  இந்த பயிற்சி முகாமில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். 

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: