Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
போலி ஆவணங்கள் தயாரித்து டிவிக்கள் வாங்கி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (35). விவசாயி. பொள்ளாச்சி, லட்சுமிபுரம், சிஞ்சுவாடியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (35). ஆட்டோ ஓட்டுநர். வேடசந்தூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (எ) செந்தில்குமார் (32). நெருங்கிய நண்பர்களான இவர்கள் மூவரும் திருப்பூரில் டிவிக்கள் விற்பனை செய்யும் 5 நிறுவனங்களுக்குச் சென்ற அவர்கள் 3 பேரும் 5 நவீன ரக டிவிகள், ஒரு ஃபிரிட்ஜ், ஒரு வாஷிங்மெஷின் என ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை தவணை முறையில் வாங்கியுள்ளனர்.
இதற்காக திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் உதவியையும் பெற்றுள்ளனர்.
அதற்காக சக்திவேல் பெயரில் ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், பான்கார்டு ஆகியவற்றின் போலி நகல்களை கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, தனியார் நிதி நிறுவன மேலாளர் வெங்கடேசன் (38), திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 இந்நிலையில், சக்திவேல், ஜெயகுமார் இருவரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்து அவர்களிடமிருந்து 2 டிவி, போலி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
 இந்நிலையில், காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை இரவு தலைமறைவாக இருந்த மகேந்திரனை கைது செய்தனர்.

 மேலும், அவரிடமிருந்து 2 டிவி, வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

0 comments: