Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
கொலை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தபட்ட 5 பேரை  திருப்பூர் போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
 திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (27). இவர், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி, ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
 இந்நிலையில், சென்னை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, மதுரையைச் சேர்ந்த சொர்ணபுரியப்பன் மகன் கனகராஜ் (30), இவரது நண்பர்கள் வெங்கடேஷ் (34), சிவக்குமார் (45), குண்டு (எ) ராஜேந்திரன் (35) ஆகிய நான்கு பேரும் திருப்பூரில் உள்ள சிலம்பரசன் வீட்டில் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 அதையடுத்து, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார், புதன்கிழமை நள்ளிரவு சிலம்பரசன் மற்றும் அந்த 4 பேரை பிடித்தனர். இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனகராஜ், சிலம்பரசன் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: