Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
உலக புத்தக தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியன சார்பில் திருப்பூரில் புத்தக விற்பனை இயக்கம் வியாழக்கிழமை துவங்கியது.
திருப்பூர், அவிநாசி சாலையில், பின்னல் புத்தகாலயம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், துணைத் தலைவர்கள் பி.ஆர்.கணேசன், செங்கம் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு பெற்ற மாநகராட்சிப் பொறியாளரும், இலக்கிய ஆர்வலருமான பழ.விஸ்வநாதன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இதில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி ரூ. 1,000 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கினார். அரிமா சங்க பொறுப்பாளர் மு.ஜீவானந்தம், பின்னல் புத்தகாலயப் பொறுப்பாளர் பா.செüந்தரபாண்டியன், மொழி பெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: