Wednesday, April 29, 2015

On Wednesday, April 29, 2015 by Unknown in ,    
புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (நீட்ஸ்), அதிக கடனுதவி வழங்கி தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசின் "நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு மானியத்துடன் வங்கிகள் மூலமாக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.
இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 2013-14 ஆண்டில், 39 பயனாளிகளுக்கு ரூ. 5.58 கோடி மானியத்துடன், ரூ. 20 கோடியே 64 லட்சத்து 13 ஆயிரம் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ. 15.33 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு மட்டும் ரூ. 8.49 கோடி மானியம் வழங்கி தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது.
வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 79 பயனாளிகளுக்கு ரூ. 3.17 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில், 824 பயனாளிகளுக்கு ரூ. 4.50 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments: