Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
உடுமலை, : அமராவதிநகர் முதலைப்பண்ணையில் ரூ.1 லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது.  உடுமலை அருகே உள்ள அமராவதிநகர் அருகே அமராவதி அணை உள்ளது. அதற்கு முன்புறம் பராமரிக்கப்படாத பூங்கா இருக்கிறது. இந்த அணையை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அணையில் தண்ணீர் நிரம்பி இருக்கும்  போது படகு சவாரி நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் படகில் அணையை சுற்றி வந்து ரசிப்பார்கள்.

  அணை அருகே வனத்துறையின் முதலைப்பூங்கா உள்ளது. அங்கு 98 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 15 சென்டி மீட்டர் அளவு கொண்ட குட்டி முதல் ராட்சத தோற்றம் வரையிலான முதலைகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர். ஆனால் டாய்லெட் வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அக்குறையை போக்க வனத்துறை சார்பில் ரூ.1லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0 comments: