Tuesday, April 21, 2015

On Tuesday, April 21, 2015 by Unknown in ,    



தாராபுரம் நகரில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி) கட்டாயம் பொருத்த வேண்டுமென காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 நகைக் கடைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பொம்மு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகைக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, திறமையான காவலாளிகளை பணியமர்த்த வேண்டும். அனைத்து நகைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அலாரம் பொருத்த வேண்டும். பொருத்தப்படும் கண்காணிப்புக் கேமராவின் செயல்பாடுகளை நகைக் கடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments: