Monday, May 04, 2015
உடுமலை நகரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலையில் ரூ. 56 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம், ரூ. 31 கோடி மதிப்பில் மூன்றாவது குடிநீர் திட்டம், ரூ. 2 கோடி செலவில் நகர்மன்ற அலுவலக கட்டடம், ரூ. 3 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர, உடுமலை நகரை நவீன நகரமாக மாற்றும் திட்டத்திற்காக, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு கோரி முன்மொழிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடைபெற்று வரும் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
குட்டைத் திடல்: நகரின் மையப் பகுதியில் உள்ள குட்டைத் திடலை வருவாய்த் துறையிடமிருந்து, நகராட்சியின் பெயருக்கு மாற்றி, நவீன பூங்கா அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
தங்கம்மாள் ஓடை: தங்கம்மாள் ஓடையில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துவிடுவதால், அதன் இரு கரையோரங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை: ஏரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும், பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
100 அடி திட்டச் சாலை: திருப்பூர் சாலை-மத்திய பேருந்து நிலையம் வரையிலான 100 அடி திட்டச் சாலையை இக்குழுவினர் ஆய்வு செய்து, அதற்கு நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
5 ஏக்கரில் நவீன பூங்கா: சிவசக்தி காலனியில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைய குப்பைக் கிடங்கு பகுதியை நவீன பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய விரிவாக்கம்: பேருந்து நிலையத்தில் உள்ள வாடகைக் கார்களை வேறு இடத்துக்கு மாற்றி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வாரச் சந்தையை விரிவாக்கம் செய்யவும், நேதாஜி மைதானத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்யவும், ராஜேந்திரா சாலையில் உள்ள அண்ணா பூங்காவை நவீன பூங்காவாக மாற்றியமைத்து நீச்சல் குளம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
புறவழிச் சாலை, 3-ஆம் குடிநீர் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன்(பொள்ளாச்சி), கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment