Monday, May 04, 2015

On Monday, May 04, 2015 by Unknown in ,    






உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரி வீட்டுக்குள் பட்டப் பகலில் மர்ம நபர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
உடுமலை ரயில் நிலையம் அருகே உள்ள கௌஸ் காலனியைச் சேர்ந்தவர் லாசர் (53). திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குடும்பத்தாருடன் தளி சாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த அனைத்து நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், இது குறித்து விசாரித்தனர். மொத்தம் 90 பவுன் நகைகள் திருடுபோனதாகவும், அவற்றின் மதிப்பு ரூ. 22 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். லாசர் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: