Friday, May 01, 2015

On Friday, May 01, 2015 by Unknown in ,    



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் .வெள்ளிரவெளி ஊராட்சி தேவனம்பாளையம்  நாச்சியம்மன் செங்குந்த திருமணமண்டபத்தில்1330பயனாளிகளுக்கு ரூ .14.08 லட்சம்  மதிப்பீட்டில் விலையில்லா மிக்சி கிரைண்டர் ,மற்றும் மின்விசிறிகளை  மாண்பிமிகு .சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் .திரு .தோப்பு என் .டி .வெங்கடாசலம் .அவர்கள் .இன்று 01-05-2015. வழங்கி பேசியதாவது .

மாண்பிமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்திற்கும்  தமிழக மக்களுக்கும் எண்ணற்ற  பல மக்கள் நலத்திட்டங்களை வழங்கி  வருகிறார்கள் .அந்த வகையில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள ஊத்துக்குளி  ஆனது கடைகோடியில் உள்ளது .முன்னோறு காலத்தில் மக்கள் வருவாய்துறையய்  சார்ந்த பணிகளுக்காக அவினாசி மட்டும் பெருந்துறை தாலுக்கா அலுவலகதிற்கு செல்ல வேண்டி இருந்தது . அதனை மாற்றி ஊத்துக்குளியய்  தனி வட்டமாக அறிவித்து புதிய தாலுக்கா அலுவலகம்  கட்டுவதற்ககாக  நிதியுனையும் ஒதுக்கி தந்துள்ளார் மேலும் மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக கூட்டுக்குடிநீர்  திட்டத்தினை வழங்கி உள்ளார் . மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை 54 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியும் அரசு மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்க்காக நிதியுனையும் மற்றும் சாலைப் பணிகளுக்கும் நிதி உதவிகளை தாயுள்ளத்தோடும்  வழங்கி உள்ளார்கள் . நரிக்குறவர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது . மேலும்  விலையில்லா 20கிலோ அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் ,எந்த மாநிலத்திலும் இல்லாத முதியோர் ஓய்வூதிய தொகையாக ரூ .1000.,கற்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவிக்கின்ற பெண்களுக்கு ரூ .12000ம் .இல்லத்தரசிகளுக்கு விலையில்ல மிக்சி கிரைண்டர்  மற்றும் மின்விசிறிகளும்  வழங்கப்படுகிறது .சமுதாய  வளைகாப்பு கற்பிணி பெண்களுக்கு நடத்தப்படுகிறது . பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா  14.வகையான கல்வி உபகரணங்கள்  வழங்கப்படுகிறது . மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமும்  ,அம்மா உணவகங்கள் அம்மா சிமெண்ட் அம்மா உப்பு , அம்மா மருந்தகங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றும்  தாய் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ .40.லட்சம் முதல் 50.லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் ஊராட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது . 

0 comments: