Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன.
 ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.
  கடந்த ஆண்டு கணக்கெடுப்புப்படி, உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் சுமார் 300 யானைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, வனத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், வனச் சரகர்கள் தங்கராஜ் பன்னீர்செல்வம் (உடுமலை) மாரியப்பன்(அமராவதி) ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
 இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:
 ஆண்டுதோறும் யானைகள் கால் தடம், நடமாட்டம் உள்ளிட்ட விசயங்களை அடிப்படையாக வைத்துக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.  இதற்காக, நிகழாண்டில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது யானைகளின் சாணத்தை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. 20 நாள்களுக்கு ஒரு முறை என  140 நாள்களுக்கு மொத்தம் 7 முறை யானைகளின் சாணத்தை  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலமாக, யானைகளின் உணவு முறை, அதனுடைய ஜீரணத் தன்மை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
 இதற்காக, உடுமலை வனச்சரகத்தில் 2 இடங்களும், அமராவதி வனச்சரகத்தில் 2 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

0 comments: