Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Unknown in ,    
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைக்கு பூட்டு போட முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தை சேர்ந்த 17 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருமுருகன்பூண்டி நெடுஞ்சாலையில், பேரூராட்சி அலுவலகம், திருமுருகநாதசுவாமி கோயில், அரசு நடுநிலைப்பள்ளி, நியாயவிலைக் கடை, அரசு மருத்துவமனை, காவல் நிலையம் ஆகியன உள்ளன. 
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடைக்கு மது அருந்த வருபவர்களில் பலர், அவ்வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மாணவிகள் ஆகியோருக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில்,திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி கட்டுமானத் தொழிற்சங்கத்தினர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க துணைச் செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் செல்வராஜ், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, கட்டட சங்க நகரச் செயலாளர் பூபதி, பொருளாளர் ஆறுமுகம், துணைச்செயலாளர் சுரேஷ், ஏஐடியுசி கட்டுமானச் சங்கப் பொறுப்பாளர்கள் தீபா, ஜெயந்தி, கலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 10 பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்த அனுப்பர்பாளையம் போலீஸார் மாலை அவர்களை விடுவித்தனர்.

0 comments: