Monday, May 04, 2015

On Monday, May 04, 2015 by Unknown in ,    




"கத்திரி வெயில்' என பரவலாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று தொடங்கி வரும் மே 29 ஆம் தேதி வரை 26 நாள்கள் நீடிக்கிறது.
இந்தக் கோடையில், இதுவரை ஒரு சில நாள்கள்தான் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் உக்கிரம் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில், சென்னையில் மழை குறைவாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது.
இந்த நிலையில், மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 29 ஆம் தேதி வரையான அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்று வீசும். பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவு வெயில் உக்கிரமாக இருக்கும். என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 comments: