Monday, May 04, 2015

On Monday, May 04, 2015 by Unknown in ,    




திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை பணியாற்றிய ஊழியர்கள், பணி முடிந்ததும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில், அந்த அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டம் ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே, அவர்கள் அலுவலகப் பூட்டைத் திறந்து, உள்ளே சென்று பார்த்தபோது, மரத்தினாலான ரேக்கில் தீப்பிடித்து, அது எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு ரசீதுகள், நிகழாண்டு ரசீதுகள், சில பதிவேடுகள் எரிந்து சேதமானதாக ஊராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பெருமாநல்லூர் பேலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: