Monday, July 13, 2015

On Monday, July 13, 2015 by Tamilnewstv in    

திருச்சி 13.7.15                  சபரிநாதன் 9443086297
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 40 வார்டு பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலைமையில் மனு கொடுத்தனர்.



40 வார்டு எடமலைப்பட்;டி புதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியிலுள்ள 4லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து டமலைப்பட்டிபுதூர் ஒரு பகுதி மட்டும் கொள்ளிடம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் குடிநீர் 6மாத காலமாக மிகமோசமாக கலப்படத்துடன் மண்கலந்த தன்மையில் உள்ளது  பொதுமக்கள் பயன்படுத்த கடினமாக உள்ளது அன்றாடம் பயன்படுத்தும் நீர் மோசமான நிலையில் உள்ளது என்று பலமுறை மனு அளித்தும் உள்ளோம் அப்படி மனு அளிக்கும் போது நீர் சுத்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது  மிக அருகாமையில் உள்ள காவிரி குடிநீர் நீர்தேக்க தொட்டியிலிருந்து முறையாக வழங்கி வந்த குடிநீரை நிறுத்தி விட்டு முறையாக வரிசெலுத்தும் மக்களின் வயிற்றில்; அடித்துவிட்டு அருகாமையில்; புதிதாக கட்டப்பட்டு வரும் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு காவிரி குடிநீர் இணைப்பை கொண்டு செல்ல இருப்பதாக அதை கண்டித்தும் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் வரிசெலுத்தும் ஏழை மக்களின் வஞ்சிக்காமல் பழைய காவிரி குடிநீர் இணைப்பை பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வழங்க வழியுறுத்தி மக்களும் 40 வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலையில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்

0 comments: