Thursday, July 16, 2015

On Thursday, July 16, 2015 by Unknown in ,    
 
பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த பயனாளிகள் 4,448 பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.டி.ஒ. சுபாநந்தினி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், யூனியன் சேர்மன் யோக வாசுதேவன், தொகுதி செயலாளர் முத்துராஜா, தாசில்தார் ரெங்கசாமி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 4448 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
அருப்புக்கோட்டை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஒன்றியங்கள் அடங்கியுள்ளது. நிறைவாக அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டியில் கொடுக்கப்பட உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் கிடைக்க வேண்டும், எந்த திட்டமும் பயனாளிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என கண்ணும் கருத்துமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பார்த்து வருகிறார்.
மேலும் அருப்புக்கோட்டை நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் வரும் 2 மாதகாலத்திற்குள் விலையில்லா பொருட்கள் வழங்குவதற்க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம், 50 ஆயிரம் பணம், ஆடு, மாடுகள், 16 அம்ச திட்டத்தை பள்ளி கல்வித் துறைக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்து வழங்கக்கூடிய ஒரே முதல்வர் ஜெயலலிதா. இவரது திட்டங்களை பார்த்து பல்வேறு மாநில முதல்வர்கள் செயல் படுத்தினார்கள், அவர்களால் நீடித்து கொண்டு செல்ல முடிய வில்லை. ஒரு திட்டத்தை தீட்டினால் அது முழுமையாக சென்றடைவதற்க்குரிய ஆற்றல், திறமை, நிர்வாக ஆளுமை பெற்ற முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார்.
எனவே பயனாளிகள் விலையில்லா பொருட்களை பெற்று என்றென்றும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலு சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் கண்ணன், மாணவரணி செயலாளர் வீரகணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கொப்பையராஜ், முருகேசன், பாலையம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிச்சாமி, இயக்குநர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, துணை தலைவர் மீனாட்சி துரைராஜ், ஊராட்சி செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 comments: