Thursday, July 16, 2015

On Thursday, July 16, 2015 by Unknown in ,    
விருதுநகரில் காமராஜர் 113–வது பிறந்த நாள் கொண்டாட்டம்: கலெக்டர்–எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
விருதுநகரில் காமராஜரின் 113-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
    விருதுநகரில், முன்னாள் முதல்வரான காமராஜரின் 113-ஆவது பிறந்த நாள் விழாவை கல்வித் திருவிழாவாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் காலை முதலே வாகனங்களில் வந்து காமராஜர் இல்லத்திற்கு சென்று  புத்தகம், நோட்டுகளை காணிக்கையாக செலுத்தி மரியாதை செய்தனர். 
    அரசு சார்பில் நடந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபம், நினைவு இல்லம் மற்றும் கச்சேரி சாலையில் உள்ள மணிமண்டபத்திற்கு சென்று அவரது உருவச் சிலைக்கு ஆட்சியர் வே.ராஜாராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஆணையாளர் முஜிபூர்ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   இவ்விழாவில் நாடார் மஹாஜன சங்கத்தின் தலைவர் கரிகோல்ராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வேலாயுதம், த.மா.காவின் வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜோதிமணி, முன்னாள் காவல் துறை தலைவர் ஜான் நிக்கல்சன், காமராஜரின் தங்கை பேரன் கனகவேல், மதிமுக சார்பில் நகர செயலாளர் ராமர், தேமுதிக சார்பில் வைரமுனி உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று மரியாதை செய்தனர்.  
     இதையொட்டி நினைவு இல்லம், ஆட்சியர் அலுவலக வளாக மண்டபம், கச்சேரி சாலை மணிமண்டபம், பெரியவள்ளிக்குளம் மணிமண்டபம் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

0 comments: