Monday, August 17, 2015

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் புத்தகம் ஒன்று, இலங்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபாகரன் இலங்கையில் தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர்.
கடந்த 2009–ம் ஆண்டு, சிங்கள ராணுவத்துடனான விடுதலைப்புலிகளின் போர் உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது (2009–ம் ஆண்டு, மே மாதம் 18–ந் தேதி) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக அறிவித்தது. இது தொடர்பாக புகைப்படங்களும் வெளியாகின.
அத்துடன் இலங்கை உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்து விட்டது.
ஏற்காத தமிழ் ஆர்வலர்கள் ஆனால் பிரபாகரன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை இன்னும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
‘‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், மீண்டும் வருவார், தனி ஈழ விடுதலைப்போரை மீண்டும் முன்னெடுத்துச்செல்வார், தமிழ் ஈழம் மலரும்’’ என்று பலரும் கூறி வருகிறார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டதாக படங்கள் வெளியிடப்பட்டபோது, அவரைப் போன்ற தோற்றம் கொண்டவரைத்தான் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என்றும் தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.
உயிருடன் பிரபாகரன்? இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சிங்கள ராணுவத்துக்கு லஞ்சம் வழங்கி அவர் தப்பிச்சென்று விட்டதாகவும், இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லியில் திரிலோக்புரி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் ஒன்றரை வருடம் தங்கி இருந்ததாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த புத்தகத்தின் பெயரையோ, அதை எழுதியது யார் என்றோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பரபரப்பு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புத்தகம் வெளியாகி இருப்பது குறித்து வெளியான தகவலால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசும், அந்த நாட்டின் அரசியல்வாதிகளும் கலக்கம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், இலங்கை ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர், பிரபாகரன் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
0 comments:
Post a Comment