Friday, June 17, 2016

On Friday, June 17, 2016 by Unknown in ,    




உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் க.லெனின்பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக உடுமலை நகர்ப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் சாலையின் இருபுறங்களிலும் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சாலைகள் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் உடுமலை நகரில் நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்ட நான்கு வ ழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். எனவே எந்த நிலையிலும் திட்டப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி சா லைகளை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: