Monday, August 17, 2015

On Monday, August 17, 2015 by Unknown in ,    

தமிழ் சினிமா உலகில் நாட்டுப்புற பாடல்களுக்கு என்று தனித்த ஒரு பாதையை தொடங்கி வைத்தவர் பரவை முனியம்மா "மதுரை வீரன் தானே " என்ற பாடல் பட்டி தொட்டிகள் எல்லாம் பட்டையை கிளப்பியதுஅத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் தற்போது மதுரை காளவாசல் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறலு க்காக சிகிச்சை பெற்றார்  தமிழ் நியூஸ் டிவி பிரத்யேக பேட்டிக்காக அவரை சந்தித்தோம்தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார்காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன தற்போது 76 வயதாகும் இவரால் முன்னைப் போல பாடுவதற்கு உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆனால் தொடர்ந்து நடிப்பேன் என்றார்

கடந்த 30 வருடங்களாக நாட்டுப்புற பாடல்களில் கோலோச்சிய இவர் திரை உலகிலும் முத்திரை பதித்தார் தற்போதோ உடல் நிலை சரியில்லாததால் பாட முடியாத சூழலிலும் பல்வேறு நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்

எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களை தாம் பாடி உள்ளதாகவும் தற்போது பல புதிய பாடகர்கள் திரையில் நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தி வருவதாகவும் அவர்களை தாம் வாழ்த்தி வரவேற்பதாகவும் கூறினார்

1988 -90 களில் பாட வந்த தம்மால் 76 படங்களுக்கு மேல் நடித்து இருப்பதகவும் தம்முடைய ஆசான் பெருமாள் கோனாரின் உதவியால் நாட்டுப்புற பாடல்களை கற்று தேர்ந்ததாகவும் குறிப்பிட்டார்

கணவர் வெள்ளைச்சாமி மறைந்ததற்கு பிறகு மதுரையிலே இருப்பதால் மாரி படத்திற்கு வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்ததாக குறிப்பிட்டார் 1 மணி நேரம் கூட இடைவெளி விடாமல் பாட முடிந்த தம்மால் தற்போது மருத்துவரின் ஆலோசனைப் படி பப்ட முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார்

நடிகர்கள் விஷால் ,சிவகர்த்திகேயன் ,தனுஷ் ஆகியோர் தமக்கு உதவிகள் செய்து வருவதாக குறிப்பிட்டார்

விரைவில் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என நமது விருப்பத்தை தெரிவித்து நெகிழ்ச்சியோடு அவரிடம் இருந்து விடை பெற்றோம்

0 comments: