Saturday, September 19, 2015

On Saturday, September 19, 2015 by Tamilnewstv in    

திருச்சிராப்பள்ளி கலையரங்கம் திருமண மண்டபத்தில் பல்கலைக்கழக நிறுவன நாள் விழா 2015 - கால்நடை மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் தின விழா நடைபெற்றது. 
இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையா அவர்கள் பேசியது : 
    தமிழ்நாட்டில் வாழும் சிறுää குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை எளியோரின் வருமானத்தை உயர்த்தவும் கிராமங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் முக்கியத் தொழிலாகக் கால்நடை மற்றும் கோழிப் பராமரிப்பு விளங்கி வருகிறது.  இதுமட்டுமல்லாமல் ஒரு தனி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த புரதப் பொருட்களாக பால்ää முட்டை  மற்றும் இறைச்சி ஆகியவை கால்நடை மற்றும் கோழிப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில்ää கால்நடைத்துறையின் பங்களிப்பானது வேளாண்மை மற்றும் சார்புத்துறையின் மொத்தப்பங்கில் 40.99 விழுக்காடாகும். 
     தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த நிதியாண்டில் கால்நடைத்துறைக்கு மட்டும் ரூ. 1ää649 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கடந்த ஆட்சியில் இத்துறைக்கு மொத்தத்தில் ரூ.400 முதல் ரூ. 500 கோடி வரை தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.  
      கால்நடை மருந்தகங்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாத நிலை மாறி கடந்த நான்காண்டுகளில் மட்டும் 1ää401 கால்நடை மருந்தகங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 1ää061 கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் கால்நடை மருத்துவக் கல்வி படிப்பிற்காக 16ää000ம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.  மருத்துவக்கல்வி கிடைக்கப்பெற்றும் அதில் சேராமல் நிறைய மாணவர்கள் தற்போது கால்நடை மருத்துவத்துறையில் விரும்பி சேர்ந்துள்ளனர்.கால்நடைத்துறை இப்போது ஒரு முக்கியத்துறையாக விளங்குவதோடுää இத்துறைக்கு தனி மரியாதையும் ஏற்பட்டுள்ளது. 
     விலையில்லா ஆடு மற்றும் கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 24 இலட்சம் ஆடுகள் வழங்கப்பட்டு  அவை 34 இலட்சம் குட்டிகள் ஈன்றுள்ளன. 52273 கறவை பசுக்கள் வழங்கப்பட்டு  இதன்மூலம் 47971 கன்றுகளை ஈன்றுள்ளன.  இந்த கறவை பசுக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 170000 லிட்டர் பால் அதிகரித்துள்ளது. 
      ஏற்கனவே தமிழகத்தில்  2 கால்நடை மருத்துவக்கல்லூரி மட்டும்தான் இயங்கி வந்தது.   தற்போது திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு ஆகிய 2 புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகள் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு இதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடும்  செய்து விரைவாகக் கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் மட்டும் இத்துறையில் 846 கால்நடை மருத்துவர்களும்ää 700 கால்நடை ஆய்வாளர்களும்ää 1000க்கும் மேற்பட்ட கால்நடை உதவியாளர்களும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இங்கு நடைபெறும் கால்நடை மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் தினவிழா மூலம் தமிகழத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  வருகைதந்துள்ள விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமும்ä பொருளாதாரமும் நிச்சயமாக முன்னேற்றடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்தார். 
    மேலும்ää நிகழ்ச்சியில் விருது பெற்ற பேராசிரியர்கள் 10 நபர்களுக்கும் சிறந்த பண்ணையார்கள் 7 நபர்களுக்கும் 30 விவசாயிகளுக்கு இடுபொருட்களும் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.டி.கே.எம்.சின்னையா அவர்கள் வழங்கினார். 
  இந்நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பூனாட்சி 30 வருடம் பணிபுரிந்த 20 பேராசிரியர்களுக்கும்12 சிறந்த மாணவர்களுக்குமான பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 
    அரசு தலைமைக் கொறடா மனோகரன் அவர்கள் கரூர் மாவட்டத்திற்கு சிறந்த கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கி சிறப்புரையாற்றினார். 
     தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திலகர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனிசாமி அவர்கள் முன்னிலையுரையும் ஆற்றினார்கள்.    
     இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெயாää நாடாளுமன்ற உறுப்பினர்கள் .ரத்தினவேல் குமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி துணைமேயர் சீனிவாசன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராமு ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி மணிகண்டம் ஒன்றியக்குழுத்தலைவர் முத்துக்கருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
     முன்னதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறவியல் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஹரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். முடிவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறவியல் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் முனைவர் தியாகராஜன் நன்றி  கூறினார்

0 comments: