Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in ,    
Image result for போலி பத்திரம்போலி பத்திரம் தயாரித்து பங்குதாரரை மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 சிவகாசி அண்ணாமலையார் காலனி சீனிவாசன் மகன் சுரேஷ்குமார் (33). காமாக் நகர் பாண்டியன் மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சேர்ந்து மேட்டமலையில் பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ்குமார் பட்டாசு ஆலையில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாம்.
 இதையடுத்து சுரேஷ்குமார் விசாரித்தபோது, அருண்குமார், அவரது மனைவி ஸ்ரீதேவி, மாணிக்க விநாயகர் காலனி அருணாசலம் மகன் ஹரிகணேஷ், விருதுநகர் கே.இ.எஸ்.குடோன் தெரு துரைராஜ் மகன் ஸ்ரீதரன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, போலியாக பத்திரம் தயாரித்து, சுரேஷ்குமார் போல கையெழுத்திட்டு அந்த பத்திரத்தை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. அந்த பத்திரத்தில் சுரேஷ்குமார் தான் பட்டாசு ஆலை பங்குதாரர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
 இதையடுத்து சுரேஷ்குமார் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தன்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் மேற்குறிப்பிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: