Saturday, September 19, 2015

On Saturday, September 19, 2015 by Unknown in , ,    


தூத்துக்குடி மாவட்டம், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை பெறும் வகையில் சிறப்பு பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் அவர்கள் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாணவ, மாணவிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயோ மெட்ரிக் பதிவுகளை மேற்கொள்ள மேலும் 32 கூடுதல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேற்படி முகாம் 18.9.2015 முதல் 31.12.2015 முடிய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளில் இம்முகாம் செயல்படுத்தப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆதார் அட்டை பெற்றிட இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.  
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தாசில்தார் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments: