Wednesday, September 30, 2015

On Wednesday, September 30, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அருப்புக்கோட்டை 28ஆவது வார்டைச் சேர்ந்த நாகலிங்கநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லையாம். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து பொதுமக்கள் விருதுநகர் பிரதான சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகர் காவல் நிலைய போலீஸார், நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   அப்போது, குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

0 comments: