Friday, October 02, 2015

On Friday, October 02, 2015 by Unknown in ,    
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் 32 பக்தர்கள் சிக்கினர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் செண்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஓடைக்கு மறுபுறம் சிக்கி கொண்ட பக்தர்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் அப்பகுதியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடத்துவதற்காக செண்பகதோப்பு பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.
காட்டாற்று வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கி கொண்ட தகவல் அறிந்து மாணவர்கள் ஓடைப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஓடைப்பகுதிக்குள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி நின்று பக்தர்களை மீட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். சரியான நேரத்தில் வந்து மீட்ட மாணவர்களை பக்தர்கள் பாராட்டினார்கள்

0 comments: