Thursday, October 15, 2015

On Thursday, October 15, 2015 by Unknown in ,    
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் வெற்றிப் பயணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும்  தொடரும் என திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூரில் வளர்மதி பாலம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பல்லடம் சாலை வழியாக ஊர்வலமாக வந்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார்.  இதையடுத்து அவர் பேசியது:
தமிழகத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அதிமுக வெற்றி பெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 7 இடைத்தேர்தல்கள், மக்களவைத் தேர்தல், மாநகரத் தேர்தல் என அனைத்திலும் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதைப்போலவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் அதிக வாக்குகள்  அதிமுக வெற்றி பெறும் என்றார்.
மாவட்ட அவைத் தலைவர் பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், துணைமேயர் சு.குணசேரகன், மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் வி.பட்டுலிங்கம், மாவட்டப் பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: