Thursday, October 15, 2015

On Thursday, October 15, 2015 by Unknown in ,    
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகள் காவ்யா(13), இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் படிப்பு விஷயம் காரணமாக காவ்யாவின் தாய் லதாமணி, தந்தை சரவணன் இருவரும் அவரைக் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காவ்யா, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.600-யை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, காவ்யாவின் பெற்றோர், உறவினர்கள் திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில்  தேடி வந்தனர். இந்நிலையில், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே காவ்யா புதன்கிழமை நின்று கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் காவ்யாவை மீட்டு, அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவிநாசி போலீஸார் காவ்யாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

0 comments: