Thursday, October 15, 2015

On Thursday, October 15, 2015 by Unknown in ,    



பல்லடத்தை அடுத்த சித்தம்பலத்தில் கூடுதல் பேருந்து வசதி வேண்டி அரசுப் பேருந்தை மாணவர்கள், கிராம மக்கள் புதன்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம் சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள்  பல்லடத்திலிருந்து சித்தம்பலம் வழியாக குள்ளம்பாளையம் வரை செல்லும் 7 ஏ நகரப் பேருந்தில் கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இப்பேருந்தில் பல்லடம் வடுகபாளையத்திலேயே அதிகப்படியான பயணிகள் ஏறி விடுவதால் சித்தம்பலத்திற்கு பேருந்து வரும்போது பேருந்தில் ஏறமுடியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். பேருந்தில் ஏற முடியாதவர்கள் ஆட்டோ, வேன் மூலமாக கூடுதல் கட்டணம் செலுத்தி கேத்தனூரில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர், பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பலமுறை சித்தம்பல கிராம மக்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால்,  ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள்,  புதன்கிழமை காலை, சித்தம்பலத்திற்கு வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

0 comments: