Thursday, October 15, 2015

On Thursday, October 15, 2015 by Unknown in ,    



பல்லடம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில்   மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்தளவே மழை பெய்தது. இதனால் விதைப்புப் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்படி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம், பொங்கலூர் பி.ஏ.பி.அலுவலகத்தில் 55 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் விதைப்புப் பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.  நல்ல விலை கிடைப்பதால் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மழை பெய்ய துவங்கியுள்ளதால் மக்காச் சோள சாகுபடி அதிகரித்துள்ளது.

0 comments: